தொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்!
தொழிநுட்ப பிரச்சினை காரணமாக யூடியூப் இணையத்தளம் முடங்கியிருந்த நிலையில் மீண்டும் தற்பொழுது இயங்க ஆரம்பித்துள்ளது.
சில தொழிநுட்ப கோளாறுகள் காரணமாகவே யூடியூப் இணையதளம் முடங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து பலரும் யூ டியூப் பக்கத்திற்கு முறைப்பாடு அனுப்பியிருந்தனர்.
அதற்கு பதிலளித்த யூடியூப் நிர்வாகம், “யூடியூப் சரியாக இயங்கவில்லை என நீங்கள் தந்த முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. யூடியூப் டிவி, யூ டியூப் மியூசிக் ஆகியவற்றை பயன்படுத்துவதில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இதனை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் இதனை சரிசெய்த பின்பு தகவல் தெரிவிக்கப்படும்.
இடையூறு ஏற்பட்டுள்ளதற்கு உங்களிடம் மன்னிப்பு கோருகிறோம்” என யூடியூப் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.
கோளாறுகள் சீர்செய்யப்பட்டு தற்போது மீள இயங்க ஆரம்பித்துள்ளது. உலகளாவிய ரீதியில் குறிப்பாக வர்த்தக ரீதியில் அதிக பயன்பாட்டில் யூடியூப் உள்ளமை குறிப்பிடத்தக்கது.