காரொன்று, டிப்பர் வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து!
திருகோணமலை, ஹபரன பிரதான வீதியில் காரொன்று, டிப்பர் வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.
குறித்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இருந்து பொலன்னறுவைக்கு சென்ற கார் ஒன்றும், கந்தளாயை நோக்கி பயணித்த டிப்பருமே மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளன.
கார் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தினாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
எனினும் இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.