பணிப்பாளர் சபையை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை?
இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபைகளை கலைக்கும் அதிகாரம் தமக்கே உள்ளது என பொது நிறுவனங்கள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கம்பளையில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த பணிப்பாளர் சபைகளை மறுசீரமைப்பது தொடர்பில் ஜனாதிபதி தன்னிடம் எழுத்து மூலம் கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகிய நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவின் கீழும், இலங்கை முதலீட்டு சபை, அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவின் கீழும் உள்ளன.
இந்நிலையில் குறித்த பணிப்பாளர் சபைகள் கலைக்கப்பட்டதாக ஊடகங்கள் வெளியிடும் செய்தி பொய்யானது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.