பிரதேச சபை உறுப்பினரால் 38 இலட்சம் நிதி உதவிகள் வழங்கிவைப்பு

பிரதேச சபை உறுப்பினரால் 38 இலட்சம் நிதி உதவிகள் வழங்கிவைப்பு

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினருமான திருமதி கோகிலகுமார் அஞ்சலாவினால் ஆலயங்கள், பாடசாலைகள், வணக்கஸ்தலங்கள் கிராம அபிவிருத்திச்சங்கம், என்பனவற்றின் தேவைகளுக்காக நேற்று நிதி உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் கம்பெரலிய வேலைத்திட்டம் 2018 நிதி ஒதுக்கீட்டில் பிரதேச சபை உறுப்பினர் திருமதி கோகிலகுமார் அஞ்சலாவிற்கு ஒதுக்கப்பட்ட 32 இலட்சம் ரூபாவில் இவ் உதவித்திட்டங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

கோவில்குஞ்சுக்குளம் அரசினர் தமிழக்கலவன் பாடசாலைக்கு விளையாட்டு மைதானப்புனரமைப்பிற்காக இரண்டு இலட்சம் ரூபாவும், நவ்வி ஸ்ரீவாணி வித்தியாலய பாடசாலையின் தேவைக்காக ஒரு இலட்சம் ரூபா, மாதர் பனிக்கர் மகிழங்குளம் கனிஷ்ட உயர் தர வித்தியாலயத்திற்கும் விளையாட்டு மைதானத்திற்கும் நான்கு இலட்சம் ரூபா, ஓமந்தை மத்திய கல்லூரியின் பாடசாலைத் தேவைக்கென இரண்டு இலட்சம் ரூபா, நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்திற்கு இரண்டு இலட்சம் ரூபா, புதிய சின்னக்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு ஒரு இலட்சம் ரூபா, பாலமோட்டை, கிழவிகுளம் பிள்ளையார் ஆலயத்தேவைக்காக ஜந்து இலட்சம் ரூபா, காயான்குளம், மருதங்குளம், ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத் தேவைக்காக ஜந்து இலட்சம் ரூபா, பனிக்கநீராவியடி பெரியமடு ஒரு கிலோ மீற்றர் வீதி புனரமைப்பிற்காக கிராம அபிவிருத்திச்சங்கத்திடம் ஜந்து இலட்சம் ரூபா, ஓமந்தை அரசமுறிப்பு ஒரு கிலோ மீற்றர் வீதி புரமைப்பிற்காக கிராம அபிவிருத்திச்சங்கத்திடம் ஜந்து இலட்சம் ரூபாவும் 10 குடும்பங்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு பெறுவதற்காக மூன்று இலட்சம் ரூபாவும் வவுனியா மாவட்ட செலயகத்தில் இடம்பெற்ற ஒருங்கினைப்புக்குழுக் கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு குறித்து ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து பறநட்டகல் தூய அடைக்கலமாதா ஆலயத்திற்கு இரண்டு இலட்சம் ரூபா, பனிக்கர்புளியங்குளம் விளையாட்டுக்கழகத்திற்கு ஜம்பதினாயிரம் ரூபா, கோவில்குஞ்சுக்குளம் கிராம அபிவிருத்திச்சங்கத்திற்கு தளபாடங்களுக்கு 30ஆயிரம் ரூபாவும் அலுவலகத்திற்கு மின் இணைப்பு வழங்குவதற்கு 25ஆயிரம் ரூபா என்பனவும் வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினரால் முதற்கட்டமாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net