சீனாவின் முன்னாள் துணை நிதி அமைச்சர் கைது!
சீனாவின் முன்னாள் துணை நிதி அமைச்சர் சாங் ஷாவ்சுன் Zhang Shaochun ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊழல் குற்ற சாட்டுகளுக்கு ஆளாகும் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஜி ஜின் பிங் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிதித்துறை முன்னாள் துணை அமைச்சர் சாங் ஷாவ்சுன் கைது செய்யப்பட்டார்.
அவர் மீதான குற்றச்சாட்டு என்ன? என்பது தொடர்பான தெளிவான விபரங்கள் எதையும் சீன ஊடகங்கள் வெளியிடவில்லை.
இதே போல முன்னாள் துணை அமைச்சரும், இண்டெர் போல் முன்னாள் தலைவருமான மெங் ஷாவ் வி மீதும் ஊழல் குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.