ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ்: மார்க் மார்கஸ் முதலிடம்!
மோட்டோ ஜிபி பந்தயத்தின், ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், ஹொண்டா அணியின் வீரரான மார்க் மார்கஸ், முதலிடம் பிடித்துள்ளார்.
இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டார் சைக்கிள் பந்தயம், ஆண்டுக்கு 19 சுற்றுகளாக பல்வேறு நாடுகளில் நடைபெறும்.
அந்த வகையில் ஆண்டின் 16ஆவது சுற்றான ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம், நேற்று டுவின் ரிங் மோடிகி ஓடுதளத்தில் நடைபெற்றது.
இதில் 4,801 கிலோ மீற்றர்கள், பந்தய தூரத்தை நோக்கி, 27 வீரர்கள் மோட்டார் சைக்கிளில் சீறிபாய்ந்தனர்.
இதில், ஹொண்டா அணியின் வீரரான மார்க் மார்கஸ், பந்தய தூரத்தை 42 நிமிடங்கள், 36.438 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு முதலிடத்திற்கான 25 புள்ளிகள் வழங்கப்பட்டன.
இது மார்க் மார்கஸின் எட்டாவது வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் அவர் நடப்பு ஆண்டுக்கான சம்பியன் பட்டத்தை உறுதி செய்துள்ளார்.
இதையடுத்து, ஹொண்டா அணியின் மற்றொரு வீரரான கால் க்ரத்லோவ், 1.573 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். அதற்கு அவருக்கு 20 புள்ளிகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து, சூசுக்கி அணியின் வீரரான அலெக்ஸ் ரின்ஸ், 1.720 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கான 16 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.
முன்னாள் சம்பியனான யமஹா அணியின் வாலண்டினோ ரோஸ்ஸி , 6.413 வினாடிகள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து நான்காவது இடத்தை பிடித்தார். அத்தோடு, அதற்கான 13 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.
இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில், ஹொண்டா அணியின் வீரரான மார்க் மார்கஸ், 296 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். டுக்கார்டி அணியின் வீரரான, ஆண்ட்ரியா டோவிசியாசோ 194 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். யமஹா அணியின் வாலண்டினோ ரோஸ்ஸி 185 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
17ஆவது சுற்றான அவுஸ்ரேலியன் மோட்டர் சைக்கிள் ஜிபி, எதிர்வரும் 29ஆம் திகதி, பிலிப் ஹைலன்ட் (Phடைடip ஐளடயனெ) ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.