அதிநவீன தொழிநுட்பம் கொண்ட தொலைபேசியை அறிமுகப்படுத்த சம்சுங் நடவடிக்கை!
புதிய ஸ்மார்ட் தொலைபேசியில் அதிநவீன அம்சங்கள் புகுத்தப்படவுள்ளமை தொடர்பாக சம்சுங் நிறுவனம் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள தகவல்களின் ஊடாக தெரிய வந்துள்ளது.
சம்சுங் 2018 OLED நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இதன்போது, அந்நிறுவனம் பல்வேறு புதிய திட்டங்கள் தொடர்பாக அறிவித்தது. அதில் பெரும்பாலும் OLED சார்ந்த தொழில்நுட்பங்கள் பற்றியே குறிப்பிட்டுள்ளது.
இதன்படி சாம்சுங் புதிய ஸ்மார்ட் தொலைபேசியில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், இன்-ஸ்கிரீன் கேமரா சென்சார் தொழில்நுட்பம், டச்-சென்சிட்டிவ் தொழில்நுட்பம் மற்றும் ஸ்கிரீன் சவுன்ட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் புதிய தொழில்நுட்பங்களை மக்களுக்கு வழங்கும் முயற்சியில் சாம்சுங் மும்முரமாக ஈடுபடுவதாகவும் இதனால் பொதுமக்களும் அதன் பயன்பாட்டை விரைவாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சம்சுங் நிறுவனம், புதிதாக கேமிங் ஸ்மார்ட் தொலைபேசி ஒன்றையும் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.