பாகிஸ்தானில் விபத்து! 19 பேர் உயிரிழப்பு 36 பேர் படுகாயம்!

பாகிஸ்தானில் விபத்து! 19 பேர் உயிரிழப்பு 36 பேர் படுகாயம்!

பாகிஸ்தானின் தேரா காஜி கான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், 36 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே (திங்கட்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் இதன்காரணமாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகின்றது.

இதேவேளை, விபத்து தொடர்பில் அறிந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஜனாதிபதி ஆரிப் அல்வி ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net