முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்!
முச்சக்கரவண்டிகளில் மீற்றர் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த விடயத்தை பின்பற்றாதவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அதனடிப்படையில் இவ்வாறான முச்சக்கரவண்டிகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகமொன்று நேற்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்குள் முச்சக்கரவண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மீற்றர்களின் தரம் தொடர்பிலான அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த அறிக்கையை ஆராய்ந்த பின், முச்சக்கரவண்டிகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட மேலும் தெரிவித்துள்ளார்.