உலகின் மிக உயரமான பாலமாக கின்னஸ் புத்தகத்தில் பதிவான சீனப்பாலம்!
தென்மேற்கு சீனாவில் அமைந்துள்ள பெய்பான்ஜியாங் பாலமானது உலகின் மிக உயரமான பாலமாக கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்மேற்கு சீனாவில் அமைந்துள்ள யுனான் மற்றும் குயிஷோ மாகாணங்களுக்கு அமைந்துள்ள இந்த பாலம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமைக்கான உத்தியோகபூர்வ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
பெய்பான்ஜியாங் ஆற்றின் மேலாக 600 மீற்றர் ஆழத்தில் யு வடிவ பள்ளத்தாக்குகளை இணைத்து அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் 1341 மீற்றர் நீளமும் ஆற்றின் மேற்பரப்பிலிருந்து 565.4 மீற்றர் செங்குத்துத் தூரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
பெய்பான்ஜியாங் பள்ளத்தாக்கில் பரவியிருக்கும் இந்த பாலத்தின் அமைப்பு, கிழக்கு சீனாவின் ஷிஜியாங் மாகாணத்தில் ஹங்ஷோ நகரத்தை இணைக்கும் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக அமைந்திருக்கிறது.
குயிஷோ போக்குவரத்துக்கான மற்றுமொரு மார்க்கமாக அமைந்துள்ள இந்த பாலம் உள்ளூர் பொருளாதார வளர்ச்சியையும் அதிகரித்துள்ளது.
பாலத்தின் கட்டுமானத்தின் விளைவாக இரண்டு மாகாணங்களிலும் மலைப்பகுதியில் வாழும் மக்கள் வெளியே சென்று உலகை அறிந்து கொள்ள வாய்ப்பும் கிடைத்துள்ளது.