உலகின் மிக நீண்டபாலத்தில் பயணித்த முதல் வாகனம் எது தெரியுமா?
சீனா மற்றும் ஹொங்கொங்கை இணைக்கும் உலகின் மிக நீண்டபாலம் (செவ்வாய்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பாலத்தின் ஊடாக முதல் வாகனமாக டபிள் டெக்கர் பேரூந்து பயணித்துள்ளது.
இந்த டபிள் டெக்கர் பேரூந்தில் பயணிக்கும் வாய்ப்பு சீன ஊடகவியலாளர்கள் குழுவுக்கு கிடைத்துள்ளது.
சீனாவையும் ஹொங்கொங்கையும் இணைக்கும் இந்த பாலம் பொதுமக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.
அதேவேளை பாலத்தின் ஊடாக 24 மணிநேர சேவையை வழங்குவதற்கு 170 பேரூந்துகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முதல்கட்டமாக 20 டபிள் டெக்கர் பேரூந்துகளும் 100 வழக்கமான பேரூந்து சேவைகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
சீனாவிலிருந்து கொங்கொங் வரையான 55 கிலோ மீற்றர் தூரத்துக்கான இபாலத்தின் கட்டுமாணப் பணிகளுக்கு 68 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.
அதேவேளை 3 மணித்தியால பயணமானது 30 நிமிடமாகவும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.