பட்டாசு வெடிக்க தடையில்லை:மகிழ்ச்சியில் சிவகாசி!
பட்டாசு வெடிக்க தடையில்லை என்னும் உச்சநீதிமன்றின் தீர்ப்பு, சிவகாசி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டாசு வெடிக்க தடை செய்த வழக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) மீள் விசாரணைக்கு வந்தது.
இதன்போது சில நிபந்தனைகள் உள்ளடங்கிய தீர்ப்பை நீதிபதிகள் வெளியிட்டனர்.
அதில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு பட்டாசு வெடிக்க வைக்கலாம். சுற்று சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமையான பட்டாசுகளையே வெடிக்க வைக்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது சிறியளவில் தாம் பசுமை பட்டாசுகளை தயாரித்துள்ளதாகவும், அதன் தொகையை அதிகரிக்க ஊழியர்களுக்கு பயிச்சி வழங்கப்பட வேண்டிய தேவையுள்ளதாகவும், கூறிய பட்டாசு தொழிற்சாலை நிறுவுனர்கள், தமது அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அரசு பொருளாதார வழ உதவியை செய்தால் பயனளிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
கந்தக பூமி, குட்டி ஜப்பான் என அழைக்கப்படும், சிவகாசியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதால், தீபாவளியை சந்தோசமாக கொண்டாடுகின்றனர் அவ்வூர் மக்கள்.