இஸ்ரேலிடம் கூடுதல் ஏவுகணை கருவிகள் கொள்வனவு!
இஸ்ரேலிடம் இருந்து ஏவுகணை எதிர்ப்பு கருவிகளை கூடுதலாக கொள்வனவு செய்வதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது.
ஏவுகணைகள் உள்ளிட்ட வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பராக் 8 எனப்படும் இத்தகைய ஏவுகணை எதிர்ப்பு கருவிகள் இரு நாட்டு படைகளிலும் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த பராக் 8 குழுமத்தில் இருந்து கடற்படையில் பயன்படுத்தும் ஏவுகணை எதிர்ப்பு கருவிகளை கூடுதலாக கொள்வனவு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.
அதன்படி 7 கப்பல்களில் பொருத்துவதற்காக 777 மில்லியன் டொலர் செலவில் ஏவுகணை எதிர்ப்பு கருவிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
இதற்காக இஸ்ரேல் நிறுவனம் ஒன்றுடன் மத்திய அரசின் பெல் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
தரை, வான் மற்றும் கடல் மார்க்கமாக வரும் அனைத்து அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள கப்பலுக்கு ஆற்றல் அளிக்கும் வகையில் இந்த ஏவுகணைகள் பொருத்தப்படவுள்ளன.