எத்தியோப்பியாவின் முதல் பெண் ஜனாதிபதி இன்று பதவியேற்பு!
எத்தியோப்பியாவின் முதல் பெண் ஜனாதிபதி இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி முலடு தெசோமேயின் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், ஷஹ்ல் வேர்க் செவ்டேவை தங்கள் புதிய ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்ள எத்தியோப்பிய மக்கள் ஆதரவளித்திருந்த நிலையில், இன்று அவர் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
ஷஹ்ல் வேர்க் செவ்டே, எத்தியோப்பியாவின் செனகலுக்கான தூதுவராக கடமையாற்றியவர்.
அத்தோடு, ஐக்கிய நாடுகள் சபையின் ஆபிரிக்க நாடுகளுக்கான விஷேட பிரதிநிதியாகவும் கடமையாற்றிய அவர் சிறந்த கல்விமானாவார்.
இவர் எத்தியோப்பிய ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையில் தான் வகித்துவந்த பதவியை கடந்த வாரம் துறந்தமை குறிப்பிடத்தக்கது.