கிளிநொச்சி பூநகரி சிறி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் புலமை பரிசில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு இன்று காலை 11.30 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்விற்கு தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
குறித்த பாடசாலையில் 163 புள்ளிகளை பெற்ற இரு மாணவிகள் மற்றும், புலமை பரிசில் பரீட்சையில் தோற்றிய ஏனைய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது உரையாற்றிய அமைச்சர், பின்தங்கிய பாடசாலை என்பதற்காக நாம் பாடசாலை அதிபர்களோ, ஆசிரியர்களோ என்னை கொழும்பில் வந்து சந்தி்க வேண்டும் என்று எதிர்பார்ப்புன் என எண்ண கூடாது.
பாடசாலை பௌதீக வள பற்றாக்குறைகள் பற்றி நான் அறிந்தேன். பாடசாலையின் சுற்று மதில் மற்றும் ஏனைய கட்டட வசதிகளிற்கு எனது அமைச்சினால் உதவுவேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இந்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் நல்ல அமைச்சர்களாகவோ, தல்ல தலைமைத்துவம் கொண்டவர்களாகவோ, விளையாட்டில் தேசியம், சர்வதேசம் பாராட்ட கூடிய நிலையில் முன்னேற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.