ரஷ்ய-இத்தாலி இணைந்த இருதரப்பு வர்த்தகத்திட்டம்!
ரஷ்யா-இத்தாலி நாடுகள் இணைந்து இருதரப்பு வர்த்தக திட்டங்களை முன்னெடுத்துள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி விளார்டிமிர் புட்டினை இத்தாலிய பிரதமர் கியூசெப்பே கொன்டே நேற்று (புதன்கிழமை) மாலை ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் சந்தித்து கலந்துரையாடலொன்றை மேற்கொண்டார்.
குறித்த இருதரப்புக் கலந்துரையாடலின் பலனாக, சக்தி, போக்குவரத்து, உட்கட்டுமானம், உணவு உற்பத்தி, உயர் தொழிநுட்பம் போன்ற துறைகளில் இரு நாடுகளும் இணைந்து வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளத்திட்டமிட்டுள்ளன.
ரஷ்யாவில் முன்னணி வகிக்கும் எண்ணெய் நிறுவனத்தின் முதல்வரான நிகோலை டொகரேவ் மற்றும் இத்தாலி நாட்டின் முன்னணி தொழில் முதல்வரான ஸ்டெஃபனோ செசினடோ ஆகியோரை இணைத்து எண்ணெய்த்தொழிற்சாலையொன்றை ஆரம்பிக்கும் முதல் திட்டத்தை நேற்று இரு நாட்டுத்தலைவர்களும் மேற்கொண்டுள்ளனர்.
ரஷ்ய-இத்தாலிய இருதரப்பு வர்த்தக செயற்பாட்டை முன்னெடுத்தமையை இட்டு நன்றி தெரிவித்ததோடு தனது மகிழ்ச்சியையும் நிகோலை டொகரேவ் தெரிவித்துள்ளார்.
நேற்று இரு நாடுகளும் முன்னெடுத்த திட்டங்கள் அனைத்தையும் அமுல்படுத்துவதன் மூலம் இத்தாலியின் வர்த்தக நிறுவனங்களை ரஷ்யாவிலும் நிருவி இரு நாட்டு பொருளாதாரத்திலும் முன்னேற்றம் காணலாமென ரஷ்ய ஜனாதிபதி விளார்டிமிர் புட்டின் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.