இலங்கை அரசியலின் திடீர் மாற்றம்! தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?
இலங்கை அரசியலில் நேற்று இடம்பெற்ற எதிர்பாராத மாற்றத்தினை அடுத்து தமிழ் கட்சிகள் யார் பக்கம்? என்ன செய்ய போகின்றார்கள்? என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து ஆட்சி செய்த நல்லாட்சி அரசாங்கம் இரவோடு இரவாக மாறியது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகிய நிலையில், பிரதமராக ரணில் விக்ரமசிங்க இருக்கும் போதே, புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக பதவியேற்றிருந்தார்.
இதையடுத்து தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் குறித்து இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடி ஒரு முடிவை எடுக்கும் என கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி…
குறித்த நிலை தொடர்பில் இன்று தமிழ் முற்போக்கு கூட்டணி ஒன்று கூடி ஒரு முடிவை எடுக்கும் என இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்…
இலங்கையின் தற்போதைய நிலை குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று கூடி ஒரு முடிவை எடுக்கும் என அக்கட்சியின் உறுப்பினர் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…
தற்போது நான் இந்தியாவில் இருக்கின்றேன். இன்று இலங்கை வந்து விடுவேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அனைத்து உறுப்பினர்களையும் எனது வீட்டுக்கு அழைக்கின்றேன். இது தொடர்பில் அவசரமாக கலந்துரையாட வேண்டும். என குறிப்பிட்டுள்ளார்.