எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் நானே முதலமைச்சர் வேட்பாளர்!

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் நானே முதலமைச்சர் வேட்பாளர்!

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜா போட்டியிடாவிடத்து நானே முதலமைச்சர் வேட்பாளர் என வட மாகாணசபை முன்னாள் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

பேரவை செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மாவை சேனாதிராஜாவை தெரிவு செய்ய வேண்டுமென்ற யோசனை முன்மொழியப்பட்ட போது, மாவைசேனாதிராஜாவும் கைவிட்டதால் தற்போது அனுபவிக்கும் நிலை ஏமாற்றத்திற்கு உரியது.

மாவட்டக் கிளையின் தற்போதைய தீர்மானத்தின் பிரகாரம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை வேட்பாளர் தமிழரசு கட்சி சார்ந்தவராக இருக்க வேண்டுமென்றும், தமிழரசு கட்சியின் யாப்பின் அடிப்படையில் ஆகக் குறைந்த சேவைக்காலத்தினை கொண்டவராகவும் இருக்க வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் பொதுவாக மாவை சேனாதிராஜா முதலமைச்சராக வர விருப்பம் தெரிவித்த காரணத்தினால் மாவை சேனாதிராஜாவை ஆதரிப்பேன்.

சில சமயங்களில் மாவைசேனாதிராஜா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடாத நிலை ஏற்படுமேயானால் அந்த இடத்தில் அடுத்த தெரிவாக உரித்துடையவன் நான் என்பதே எனது நிலைப்பாடு.

அந்த சந்தர்ப்பத்தில் எனது கோரிக்கையை முன்வைப்பேன். கட்சியின் செயல்நிலை மற்றும் மாகாண அங்கீகாரங்கள், கடந்த 5 வருடங்களில் நான் செயற்பட்ட விதங்கள், அநுபவங்கள், அறிவுகள் இவற்றின் அடிப்படையில் அந்தத்தகுதி எனக்கு இருப்பதை மற்றவர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகின்றேன்.

ஆகவே மாவை சேனாதிராஜா போட்டியிடாத சூழ்நிலையில் எனது கோரிக்கையை வலியுறுத்துவேன் என தெரிவித்துள்ளார்.

Copyright © 9824 Mukadu · All rights reserved · designed by Speed IT net