காசாவில் நூற்றுக்கணக்கான இலக்குகளை இஸ்ரேல் தாக்கியுள்ளது!
காசாவில் உள்ள நூற்றுக்கணக்கான இலக்குகள் மீது இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) காலை தொடக்கம் எல்லைப்பகுதி வழியாக கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் தொடக்கம் பாலஸ்தீன போராளிகள் எல்லையைக் கடந்து தங்களின் பளுவான எறிகணைக்களைக் கொண்டு தாக்குதல் நடத்திவந்தனர்.
எனினும். இஸ்ரேல் மற்றும் காஸாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் போராளிகளின் பகுதிகளில் இருந்து நடத்தப்பட்ட பதில் தாக்குதல்களின் விளைவாக உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நான்கு பாலஸ்தீனிய ஆர்ப்பாட்டக்காரர்களை எல்லைப்பகுதிக்கு அருகில் வைத்து நேற்று (வௌ்ளிக்கிழமை) கொலை செய்தமைக்கு பதிலடியாக தாமும் ரொக்கட் தாக்குதலை மேற்கொண்டதாக ஹமாஸ் இயக்கம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
எவ்வாறாயினும், இஸ்ரேலும் இதேபோன்ற செயற்பாட்டையே மேற்கொள்வதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேல் படையினர் தரப்பில் வௌியிடப்பட்டுள்ள காணொளியொன்றில் காஸா நகர் பகுதியில் உள்ள பல மாடிக் கட்டிடங்களும், ஹமாஸ் தலைவர்கள் மற்றும் செயலக கட்டிடங்கள் என்பன எறிகணைத் தாக்குதல்கள் மூலமாக நிர்மூலமாக்கப்பட்ட காட்சிகள் பதிவாகியுள்ளன.