சற்றுமுன் ரணில் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

சற்றுமுன் ரணில் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டின் பிரதமர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற ரீதியிலேயே நான் இந்த கூட்டத்திற்கு வந்துள்ளேன் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து ரணில் விக்ரமசிங்க தலைமையில் சற்றுமுன் கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தில் எனக்கே பெரும்பான்மை உள்ளது. வேறு எவரும் என்னை விட பெரும்பான்மை கொண்டிருந்தால் அவர்கள் நாடாளுமன்றத்தில் அதை வெளிக்காட்டலாம்.

தற்போதைய நிலையில், பெரும்பான்மை பலம் யாருக்கு இருக்கின்றது என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்கும். அந்த வகையில் நாட்டின் பிரதமர் யார் என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்.

இதற்காக நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகரிடம் தாம் கோரிக்கை விடுப்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதில் நாடாளுமன்றம் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில், 2 வாரங்களுக்கு யார் பிரதமர்? என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு, “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை யாருக்கு இருக்கின்றதோ அவரே பிரதமர், அந்த வகையில் எனக்கே பெரும்பான்மை உள்ளது. இரண்டு தடவைகள் எனது பெரும்பான்மையை நாடாளுமன்றில் உறுதி படுத்தியுள்ளேன். ஆகவே நானே பிரதமர்” என பதிலளித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க, மனோ கணேசன், சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியூதின், பழனி திகாம்பரம் மற்றும் ராஜித சேனாரட்ன ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2533 Mukadu · All rights reserved · designed by Speed IT net