இந்தியாவின் அழைப்பை மறுத்தது அமெரிக்கா

இந்தியாவின் அழைப்பை மறுத்தது அமெரிக்கா

இந்தியாவின் 69ஆவது குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு இந்தியா விடுத்த அழைப்பை அவர் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளை மாளிகையின் ஊடகத்துறை செயலாளர் சாரா சாண்டர்ஸ் அண்மையில் அளித்த நேர்காணலொன்றில்,

“2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்தியாவின் குடியரசு தினவிழாவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது எனவும் அவ்விடயம் தொடர்பில் இறுதி தீர்மானம் இன்னும் எடுக்கவில்லை” எனவும் சில இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் அமெரிக்க அதிகாரிகள், அதிபர் டிரம்பின் இந்தியப் பயணம் தொடர்பில் கூறியுள்ளதாவது, “ஜனவரி மாதத்தில் அமெரிக்காவின் எஸ்.ஓ.டி.யு மாநாடு நடைபெறவுள்ளமையால் அதில் ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்கவுள்ளார்.

ஆகையால், ட்ரம்ப் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வது சந்தேகமே” என குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் குடியரசு தினவிழாவில் பங்கேற்காததன் ஊடாக இந்தியா- அமெரிக்காவுக்கு இடையில் சிறந்த சமூகமாக உறவு தற்போது இல்லையென்பது வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுமென ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net