மஹிந்தவின் நியமனம் இலங்கையின் இறுதிகட்ட யுத்தத்தை நினைவுபடுத்தியுள்ளது!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்று உள்ளமையானது 2009 ஆம் ஆண்டு இறுதிகட்ட யுத்தத்தை நினைவுப்படுத்துவதாக அமைந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
புதுக்கோட்டை தூவார் கிராமத்தில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற நிலைமை இலங்கை தமிழர்களுக்கு ஒருபோதும் ஏற்படாதென நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பா.ஜ.க அரசு ஆட்சியில் உள்ளதால் இலங்கை தமிழர்கள் எந்த வகையிலும் அச்சப்பட தேவையில்லை எனவும் பொன்.இராதாகிருஷ்ணன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் குற்றவாளியாக காங்கிரஸ் கட்சி காணப்படுகின்றது . ஆனால் காங்கிரஸோ அதனுடன் கூட்டணி அமைத்துள்ள தி.மு.க.வோ இன்னும் இவ்விடயம் தொடர்பில் பதிலளிக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.