உடும்புப்பிடி பிடிக்கும் ரணில்! விரட்டுவதில் போராடும் மகிந்த!

உடும்புப்பிடி பிடிக்கும் ரணில்! விரட்டுவதில் போராடும் மகிந்த!

இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத மாற்றங்கள் பாரிய அரசியல் புரட்சி ஒன்றையே ஏற்படுத்தியுள்ளது.

எதிர்பாரா தருணத்தில் பிரதமராக பதவியேற்றார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

இந்த குழப்பங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்க, நான்தான் தற்போதும் பிரதமர் என்றார் ரணில், அதனையடுத்து பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க மகிந்த மற்றும் ரணில் தரப்பு ஏனைய இதர கட்சிகளின் ஆதரவை நாடியது.

தொடர்ந்து, பல கட்சித் தாவல்கள், அமைச்சரவை கலைப்பு, தற்போது புதிய தேர்தல் என பரபரப்பான ஒரு சூழலில் நாடு சென்றுகொண்டிருக்க, சமூக வலைத்தளங்களில் தமது பதவியை உறுதிப்படுத்தவும் எமது தலைவர்கள் மறக்கவில்லை.

பிரதமரான சில மணித்தியாலங்களிலே தன்னுடைய டுவிட்டர் தளத்தில் இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்ச என தன்னுடைய தகல்களை மாற்றினார் பிரதமர் மகிந்த.

அதன் பின்னர் தற்போது பிரதம அமைச்சருக்கான அரச உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலிருந்து ரணில் விக்ரமசிங்கவின் பெயர் அகற்றப்பட்டு மகிந்த ராஜபக்சவின் பெயர் மாற்றப்பட்டது.

தற்போது, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமை வகிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நான்தான் தற்போதும் பிரதமர் என்று ரணில் விக்ரமசிங்கவின் புகைப்படத்துடன் பதிவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்வாறான மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நாளைய நாளில் என்ன மாற்றங்கள் காத்திருக்கின்றது என்பதை எதிர்நோக்கி நாட்டு மக்கள் மாத்திரம் அல்ல சர்வதேசமும் இலங்கையை உற்றுநோக்குகின்றது.

Copyright © 2718 Mukadu · All rights reserved · designed by Speed IT net