கடல் கன்னியாக தன்னை உருமாற்றிய ஆசிரியை!
கடல்கன்னிகள் மீது கொண்ட காதலால் கனடாவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் தனது வேலையை விட்டு கடல்கன்னியாகவே வாழ்ந்து வருகின்றார்.
நோவா ஸ்கோட்டியா என்ற தீவுப் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபைன் நார்மன் (Stephaine Norman) என்ற ஆசிரியைக்கு கடல்கன்னிகள் குறித்து அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமானதாக இருந்ததாம்.
இந்த நிலையில் இதற்காக கடந்த 2008ஆம் ஆண்டு முதல் தன்னை கடல்கன்னியாக மனதில் உருவகப்படுத்திக் கொண்ட அவர், அதற்காக சில சிறப்புப் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார்.
எந்த உபகரணமும் இன்றி நீருக்கடியில் அதிக நேரம் மூச்சை அடக்கி வைக்கும் வித்தையைக் கற்றுக் கொண்ட அவர், தற்போது அருங்காட்சியகம் ஒன்றை தனியாக அமைத்து கடல் கன்னி போல் வேடமணிந்து சுற்றுலா பயணிகளைக் கவர்ந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.