மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட விதம் சட்ட ரீதியானதல்ல!

மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட விதம் சட்ட ரீதியானதல்ல!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட விதம் சட்ட ரீதியானதல்ல என சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு இது தொடர்பில் சட்ட மா அதிபர் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்ரமசிங்கவை பணி நீக்கம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட முறை சட்டத்திற்கு முரணானது என சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளதாக குறித்த தகவல்களில் குறிப்பிடப்படுகின்றன.

நாடாளுமன்ற செயன்முறைகளை பயன்படுத்தி ரணில் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டுமென சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார் என உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இவ்வாறான அறிவிப்பு சட்ட மா அதிபரால் வெளியிடப்படவில்லை என மஹிந்த அணியை சேர்ந்த சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net