ரணிலிடம் ஜி.எல்.பீரிஸ் விடுத்துள்ள வேண்டுகோள்!
புதிய பிரதமரை நியமித்த ஜனாதிபதியின் நடவடிக்கை சட்ட ரீதியானது எனவும், ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டை முழுமையாக புறக்கணிப்பதாகவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சகல நடவடிக்கைகளையும் அரசியல் யாப்புக்கு உட்பட்டே மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேவையற்ற போலியான பிரச்சாரங்களை முன்வைத்து நாட்டில் பதற்றமான ஒரு நிலைமையைத் தோற்றுவிக்க ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இவ்வாறான நடவடிக்கைகளிலிருந்து தவிர்த்து கொள்ளுமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் தான் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்