இத்தாலியில் சூறாவளி – 4 பேர் பலி!
இத்தாலியில் வீசும் சூறாவளி காரணமாக அந்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய, தெற்கு இத்தாலியில் நேற்று (திங்கட்கிழமை) பாரிய சூறாவளியொன்று தாக்கியுள்ளது.
குறித்த சூறாவளி தாக்கத்தினால் இத்தாலியில் வேறுபட்ட மூன்று இடங்களில் மரங்கள் முறிந்து விழ்ந்து நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக மீட்புப்பணியதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சூறாவளி தாக்கும் குறிப்பிட்ட பிராந்தியங்களில் அதிக காற்றுடன் அடை மழையும் பொழியுமென பிராந்திய மக்களுக்கு தேசிய சிவில் பாதுகாப்பு முகவரகம் எச்சரித்துள்ளது.
இதனால், பொதுமக்கள் அதிகமாக வெளியில் நடமாடுவதைக் குறைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் வடக்கிலுள்ள ஜெனோவா நகரில் வீதிச்சமிஞ்சைக் கம்பங்கள் அனைத்தும் முறிந்துவீழ்ந்துள்ளதாக அந்நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தலைநகர் ரோம் உட்பட பல நகரங்ளின் பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.