நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி ஒற்றுமைக்கான ஓட்டம்!
சர்தார் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தீவு திடலில், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கிய ஒற்றுமைக்கான ஓட்டம் நடைபெற்றது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் இன்று (புதன்கிழமை) இந்த ஒற்றுமை ஓட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.
தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த ஓட்டத்தில், ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர்.
இதில் பங்கேற்ற பின்னர் நாட்டு மக்கள் முன் உரையாற்றிய நிர்மலா சீதாராமன், நாடு ஒற்றுமையாக இருக்க இளம் தலைமுறை கைகோர்க்க வேண்டும் என்றார்.
அத்துடன், இன்றைய ஓட்டத்தில் மாணவர்கள் அதிகளவில் பங்கேற்றுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.