அடுத்த நகர்வுகள் தொடர்பாக மஹிந்தவுக்கு ஆலோசனை!

அடுத்த நகர்வுகள் தொடர்பாக மஹிந்தவுக்கு ஆலோசனை!

நாட்டில் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய ஐந்து ஆலோசனைகளை அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் இடையில் நேற்று (வியாழக்கிழமை) விசேட சந்திப்பொன்ற நடைபெற்றுள்ளது. இதன்போதே அவர்கள் இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

அந்தவகையில் அவர்களால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளாவது, “அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது கைவிடப்பட வேண்டும்.

மேலும் மத்திய வங்கி நிதி மோசடி தொடர்பில் மக்களுக்கு தெரியப்படுத்தி, அதனுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இதேவேளை அரசாங்கத்தின் அனுமதியின்றி ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் தன்னிசையாக வழங்கிய ஆலோசனை மற்றும் அதற்கு அடிப்படையாக காணப்பட்ட OISL ஆணையாளர் அறிக்கை இரத்து செய்யப்பட வேண்டும்.

தொல்பொருட்கள் மற்றும் தேசிய மரபுரிமைகளை பாதுகாக்க பிரதேச வேறுபாடுகளின்றி சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அரச சார்பற்ற நிறுவனங்கள் நேரடியாக முதலீடு பெறுவதனை நிறுத்தி அவ்விடயம் தொடர்பில் கண்காணிக்க புதிய நடைமுறையொன்றை பின்பற்ற வேண்டும்” என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net