ரணிலின் பாதுகாப்பிற்கு கோட்டா உத்தரவாதம்?

ரணிலின் பாதுகாப்பிற்கு கோட்டா உத்தரவாதம்?

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்‌ஷ நேற்று இரவு ரணில் விக்ரமசிங்கவை அலரிமாளிகைக்கு சென்று சந்தித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு தொடர்பாகவே இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதன்போது ரணிலின் பாதுகாப்பு தொடர்பாக கோட்டாபய உத்தரவாதம் வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இருந்தபோதிலும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், பிரதமர் மஹிந்த ராஜப்க்‌ஷவின் விஷேட தூதுவராகவே கோட்டாபய, ரணிலைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பின் போது, தம்மிடம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்றும், ஜனாதிபதி தங்களை ஏமாற்றிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேமஹிந்தவுக்கு ன உறுதி அளித்த போதும் அவர் அதனை நிறைவேற்ற தவறிவிட்டார் என மேலும் தெரிவித்துள்ளார்.

ரணிலுடனான கோட்டாவின் சந்திப்பு குறித்து பல்வேறு கேள்விகள் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரணிலுக்கு கௌரவமான வெளியேற்றம் தொடர்பில் ஆலோசனை வழங்க சென்றாரா..? அன்றேல் அச்சுறுத்தும் பாணியில் சென்றாரா..? அன்றேல் அரசியல் மாற்ற நடவடிக்கை பிசுபிசுத்துவிட்டது.

இதில் இருந்து மீள்வதற்கு ஒரு வழியை காட்டுங்கள் என்று கேட்க சென்றாரா என்ற வகையில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net