வணிகமயமாகும் வட்ஸ்அப்!

வணிகமயமாகும் வட்ஸ்அப்!

வட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் வழங்கப்பட இருப்பது குறித்து அந்நிறுவன துணைத் தலைவர் க்ரிஸ் டேனிய்ல்ஸ் முக்கிய தகவலை வழங்கியுள்ளார்.

வட்ஸ்அப் செயலியின் ஸ்டேட்டஸ் பகுதிகளில் விளம்பரங்கள் வழங்கப்படலாம் என தகவல் வெளியானது.

தற்சமயம் வாட்ஸ்அப் துணை தலைவர் க்ரிஸ் டேனியல்ஸ் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்த வகையில் ஃபேஸ்புக் நிறுவனம் வட்ஸ்அப் செயலியை வணிகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.

இதன் மூலம் வணிக நிறுவனங்கள் மக்களை வட்ஸ்அப் செயலி மூலம் தொடர்பு கொள்ள முடியும்.

வட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் வழங்குவது குறித்த விவரங்கள் அவ்வப்போது வெளியான நிலையில், இதன் செயற்பாட்டுக்கு வரும் காலம் குறித்து எவ்வித தகவலும் இல்லை.

உலகம் முழுக்க வட்ஸ்அப் செயலியை இதுவரை சுமார் 150 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

வட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அம்சத்தில் புகைப்படம், எழுத்துக்கள், வீடியோக்கள், அனிமேஷன் ஜிஃப் உள்ளிட்டவற்றை பகிர்ந்துகொள்ள முடியும்.

இவை 24 மணி நேரத்திற்கு பின் தானாக மறைந்து போகும். தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் வட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் ஃபேஸ்புக் விளம்பர அமைப்பின் மூலம் இயங்கும் என கூறப்படுகிறது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net