காதலியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி ஆற்றில் வீசிய காதலன்!
இந்தியாவின் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மாயமான இளம்பெண், கொலை செய்து ஆற்றில் வீசப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி, புதுக்கோட்டை அருகேயுள்ள மருந்துகடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 28ஆம் திகதி முதல் அவரைக் காணவில்லை என்று அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதுகுறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது, அதிரான்விடுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவருடன் கஸ்தூரி கடைசியாகச் சென்றது தெரியவந்ததுள்ளது.
இந்தநிலையில் சென்னையில் மறைந்திருந்த நாகராஜை கைதுசெய்து பொலிஸார் விசாரித்துள்ளனர்.
இதன்போது, ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருவரும் ஒன்றாக இருந்தபோது கஸ்தூரி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும், இந்தநிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் அவரது உடலை தஞ்சை மல்லிப்பட்டினத்தில் உள்ள ஆற்றில் வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர.