பாராளுமன்றத்தை கூட்டுமாறு வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் போராட்டம்!
பாராளுமன்றத்தை கூட்டுமாறு வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இன்று பகல் 12 மணியளவில் இடம்பெற்றது.
கிளிநொச்சி கண்ணன் கோவில் முன்பாக இருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்ட பேரணி கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு கவன ஈர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.