பிரதிநிதித்துவத்தை விற்க வேண்டிய தேவை எனக்கில்லை!
50 கோடி ரூபா நிதியினை பெற்றுக் கொண்டு கட்சி தாவினேன் என்று சாட்டப்படும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது எனத் தெரிவித்துள்ள சுற்றுலாத்துறை மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் வசந்த சேனாநாயக, மக்கள் வழங்கிய பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பணத்திற்கு விற்க வேண்டிய தேவை எனக்கு கிடையாது எனவும் குறிப்பிட்டார்.
மேலும் ஐக்கிய தேசிய கட்சியில் ஒன்றிணைந்து ஜனாதிபதி கடந்த காலங்களில் செயற்பட்டாலும் பல காரணிகள் அதிருப்தியினை ஏற்படுததின .
இதன் உச்சக்கட்டமே ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்தன அதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. தற்போதைய புதிய ஆட்சி மாற்றம் அனைவருக்கும் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.
சுற்றாடல், வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.