இரண்டாயிரத்து 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் போக்குவரத்தில் பெரும் சிரமம்.

இரண்டாயிரத்து 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் போக்குவரத்தில் பெரும் சிரமம்.

கிளிநொச்சி பிரமந்தனாறு மயில்வாகனபுரம் ஆகிய பகுதிகளுக்கான பிரதான வீதி புனரமைக்கப்படாமையினால் இப்பகுதிகளில் வாழும் சுமார் இரண்டாயிரத்து 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவில் அதிகளவான சனத்தொகையைக் கொண்ட பகுதியாகக் காணப்படும் புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் ஆயிரத்து 816 குடும்பங்களைச் சேர்ந்த 5613 பேரும் புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் 712 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்து 183 பேரும் மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த கிராமங்களுக்கான பிரதான வீதிகள் எவையும் இதுவரை புனரமைக்கப்படாத நிலையில் இக்கிராமங்களில் வாழும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறித்த கிராமங்களில் போதிய அடிப்படை வசதிகள் பொதுச்சேவைகள் என்பவற்றைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இங்குள்ள மக்கள் இடங்களிற்கே செல்ல வேண்டியுள்ளது.

அத்துடன் பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதிலும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே குறித்த கிராமங்களில் பிரதான வீதியாகக் காணப்படும் வீதிகளைப் புனரமைத்துத் தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net