“தமிழ்த்தேசியத்தின் காவலனே வருக” கிளிநொச்சியில் சுவரொட்டிகள்!
“தமிழ்த்தேசியத்தின் காவலனே வருக ” முன்னாள் முதலமைச்சரை வரவேற்று கிளிநொச்சியில் சுவரொட்டிகள்
வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரனை வரவேற்று கிளிநொச்சியின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்ப்பட்டுள்ளன.
தமிழ்த்தேசியத்தின் காவலனே வருக வருக தடை தகர்த்து தமிழர் எம் உரிமை காக்க உங்களுடன் நாங்கள் என எழுதப்பட்ட வசனங்களுடன் கிளிநொச்சி நகரெங்கும் குறித்த சுரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சுவரொட்டியின் கீழே வன்னி மக்கள் என எழுதப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 24 ஆம் திகதி வட மாகாண முன்னாள் முதலமைச்சர் தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய தனது கட்சியை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது