மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் காரியாலயத்தை மீளவும் கிளிநொச்சியில் அமைக்க வேண்டும்!
கிளிநொச்சி மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் காரியாலயத்தை மீளவும் கிளிநொச்சியில் அமைக்க வேண்டும் என மாவட்டத்தின் பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
வடக்கு மாகாணத்தில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பூநகரி பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளும் கரைச்சி பூநகரி பச்சிலைப்பள்ளி ஆகிய மூன்று பிரதேச சபைகளையும் கொண்ட சுமார் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வரும் ஒரு மாவட்டமாக காணப்படுவதுடன், 34 இற்கும் மேற்பட்ட தபாலகங்கள் இயங்கி வருகின்றது.
இந்நிலையில் கடந்த 1990ம் ஆண்டு காலப்பகுதியில் மூடப்டப்ட கிளிநொச்சி மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் காரியாலயத்தை மீள ஆரம்பிக்கப்படவேண்டும் என மாவட்டத்தின் அமைப்புக்கள் கோரியுள்ளன.
அதாவது, பரந்தன் தபாலகம் பூநகரி தபாலகம் பளை தபாலகம் கிளிநொச்சி தபாலகம் ஆகிய நான்கு பிரதான தபாலகங்களின் கீழ் சுமார் 34 இற்கும் மேற்பட்ட உப தபாலகங்கள் இயங்கி வருகின்றன.
இதனைவிட யுத்தம் காரணமாக செயலிழந்த முகமாலை மற்றும் ஆனையிறவு பகுதிகளுக்கான உப தபாலகங்கள் இதுவரை மீள ஆரம்பிக்கப்படவில்லை என்றும் இதனை விட பாரதிபுரம் செல்வாநகர் மயில்வாகனபுரம் ஆகிய பகுதிகளிலும் புதிய தபாலகங்களை நிறுவுவதற்கான கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டங்களில் குறித்த விடையங்கள் பேசப்பட்டபோதும், இது தொடர்பில் எந்த முன்னேற்றங்களும் இல்லை எனவும் மேற்படி பொதுஅமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதேவேளை கடந்த காலத்தில் கிளிநொச்சி மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் காரியாலயம் யுத்தம் காரணமாக வவுனியாவிற்கு இடம்மாற்றப்பட்டது.
குறித்த அஞ்சல் அத்தியட்சகர் காரியாலயம் இதுவரை மீள ஆரம்பிக்கப்படாமல் மீள்குடியமர்வின் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தின் தபாலகங்கள் மீள இயங்க ஆரம்பித்து ஒன்பது வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் வவுனியா மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் காரியாலயத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்து இயங்கி வருகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்கனவே இயங்கிய மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் காரியாலயத்தை தற்போது வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு திரை மறைவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு சொந்தமான மேற்படி காரியாலயத்தை கிளிநொச்சியில் அமைக்கவேண்டும் என மேற்படி அமைப்புக்கள் கோரிக்கை விடுததுள்ளனகிளிநொச்சி மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் காரியாலயத்தை மீளவும் கிளிநொச்சியில் அமைக்க வேண்டும் என மாவட்டத்தின் பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
வடக்கு மாகாணத்தில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பூநகரி பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளும் கரைச்சி பூநகரி பச்சிலைப்பள்ளி ஆகிய மூன்று பிரதேச சபைகளையும் கொண்ட சுமார் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வரும் ஒரு மாவட்டமாக காணப்படுவதுடன், 34 இற்கும் மேற்பட்ட தபாலகங்கள் இயங்கி வருகின்றது.
இந்நிலையில் கடந்த 1990ம் ஆண்டு காலப்பகுதியில் மூடப்டப்ட கிளிநொச்சி மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் காரியாலயத்தை மீள ஆரம்பிக்கப்படவேண்டும் என மாவட்டத்தின் அமைப்புக்கள் கோரியுள்ளன.
அதாவது, பரந்தன் தபாலகம் பூநகரி தபாலகம் பளை தபாலகம் கிளிநொச்சி தபாலகம் ஆகிய நான்கு பிரதான தபாலகங்களின் கீழ் சுமார் 34 இற்கும் மேற்பட்ட உப தபாலகங்கள் இயங்கி வருகின்றன.
இதனைவிட யுத்தம் காரணமாக செயலிழந்த முகமாலை மற்றும் ஆனையிறவு பகுதிகளுக்கான உப தபாலகங்கள் இதுவரை மீள ஆரம்பிக்கப்படவில்லை என்றும் இதனை விட பாரதிபுரம் செல்வாநகர் மயில்வாகனபுரம் ஆகிய பகுதிகளிலும் புதிய தபாலகங்களை நிறுவுவதற்கான கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டங்களில் குறித்த விடையங்கள் பேசப்பட்டபோதும், இது தொடர்பில் எந்த முன்னேற்றங்களும் இல்லை எனவும் மேற்படி பொதுஅமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதேவேளை கடந்த காலத்தில் கிளிநொச்சி மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் காரியாலயம் யுத்தம் காரணமாக வவுனியாவிற்கு இடம்மாற்றப்பட்டது. குறித்த அஞ்சல் அத்தியட்சகர் காரியாலயம் இதுவரை மீள ஆரம்பிக்கப்படாமல் மீள்குடியமர்வின் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தின் தபாலகங்கள் மீள இயங்க ஆரம்பித்து ஒன்பது வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் வவுனியா மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் காரியாலயத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்து இயங்கி வருகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்கனவே இயங்கிய மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் காரியாலயத்தை தற்போது வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு திரை மறைவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு சொந்தமான மேற்படி காரியாலயத்தை கிளிநொச்சியில் அமைக்கவேண்டும் என மேற்படி அமைப்புக்கள் கோரிக்கை விடுததுள்ளன