அரசியல் குழப்பத்திற்கு அப்பால் இலங்கையின் எதிர்காலம் ?
ரணில் விக்கிரமசிங்கவை கடந்த ஒக்டோபர் 26ம்திகதி வெள்ளிக்கிழமை அதிரடியாக பிரதமர் பதவியில் இருந்து நீக்கி மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானம் உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேசத்திலும் தீவிரமான அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது.
ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானம் அரசியல்யாப்பிற்கு முற்றுமுழுதாக முரணானது என்ற வாதம் வலுவாக ஒலித்துக்கொண்டிருக்கும் நிலையில் பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டவேண்டும் என்ற கோரிக்கை பலமாக பல்வேறு தரப்புக்களிடமிருந்தும் விடுக்கப்பட்டுவருகின்றது.
இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பினர் தாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல்சாசனத்திற்கு அமைவானதாகவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வாதிட்டு தமது தரப்பை நியாயப்படுத்தும் நகர்வுகளை முன்னெடுத்துவருகின்றனர்.
தற்போது இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி அடுத்து ஒரிரு வாரகாலப்பகுதியில் எந்தத்தரப்பிற்கு சார்பாக நிறைவிற்கு வந்தாலும் இலங்கை எதிர்காலத்தில் மிகவும் பாரதூரமான சாவல்களை சந்திக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச ஆதரவு
மைத்திரி-மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தற்போதைய மல்லுக்கட்டலில் வெற்றிபெற்றால் அவர்கள் முதலில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக சர்வதேச ஆதரவே இருக்கப்போகின்றது.
ஏனெனில் கடந்த வெள்ளிக்கிழமை பதவிப்பிரமாணம் செய்து இன்றுடன்11 நாட்கள் ஆகியும் இதுவரையில் சீனா உட்பட எந்தவொரு நாடும் அவரை அங்கீகரிக்கவில்லை.
இந்த நிலையில் இலங்கையின் எதிர்காலம் எதை நோக்கிப் பயணிக்கின்றது என்பது தொடர்பாக இந்த கட்டுரை ஆராய்கின்றது.
கடந்த சனிக்கிழமை சீனத் தூதுவர் தலைமையிலான தூதுவர் தலைமையிலான தூதுக்குழுவினர் சந்தித்தது உண்மைதான் ஆனால் அவர்கள் அடுத்து ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்திருந்தார்கள் என்பதை நினைவுறுத்தவேண்டும்.
தொடரும்…..