மடு பிரதேச செயலகத்தின் அரச உத்தியோகத்தர்களினால் அபகரிக்கப்பட்ட காணி மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைப்பு

மடு பிரதேச செயலகத்தின் அரச உத்தியோகத்தர்களினால் அபகரிக்கப்பட்ட காணி மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைப்பு

மன்னார் மடு பிரதேச செலயகப்பிரிவிலுள்ள கட்டை அடம்பன் பகுதியிலுள்ள இரண்டு ஏக்கர் மேட்டுக்காணியை அரச ஊழியர்களிடமிருந்து வவுனியா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினரின் தலையீட்டில் திரும்ப மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மன்னார் மடு பிரதேச செலயகப்பிரிவிலுள்ள கட்டை அடம்பன் பகுதியிலிருந்து மேட்டுக்காணி இரண்டு ஏக்கர் தந்தையின் பெயரிலிருந்து வந்துள்ளது இதையடுத்து குறித்த காணியின் ஆவணங்களை அவரது இறப்பின் பின்னர் அவரது மகன் தனது பிள்ளைகளுக்கு பங்கிட்டு வழங்கும் நோக்கில் மடு பிரதேச செயலகப்பிரிவிற்கு எடுத்துச் சென்று காணியை ஆராய்ந்தபோது குறித்த இரண்டு ஏக்கர் காணியினை மடு பிரதேச செலயகப்பிரிவில் பணியாற்றும் கிராம அலுவலகர் உட்பட 4 அரச ஊழியர்கள் அரை ஏக்கராக பிரித்து தமது பெயர்களின் காணி அனுமதிப்பத்திரம் கடந்த 2012ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டுள்ள சம்பவம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த வருடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு அவர்களின் கவனத்திற்குக்கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் மடு பிரதேச செயலகப்பிரிவில் கடமையாற்றிய பிரதேச செயலாளருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து புதிய பிரதேச செயலாளரின் முயற்சியில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரியின் வழிநடத்தலில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரியும் சட்டத்தரணியுமான ஆர்.எல்.வசந்தராசா சம்பவ இடத்திற்குச் சென்று கள விசாரணைகளை ஆரம்பித்து குறித்த பிரதேச செலயகத்தில் பணியாற்றிய கிராம அலுவலகர் உட்பட 4 பேரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் ஒரு வருட காலத்திற்குள் காணியை மீளப்பெற்று உரிமையாளருக்கு குறித்த இரண்டு ஏக்கர் காணியையும் மதிப்பீடு செய்யப்பட்ட பணத்தின் பெறுமதியில் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

அரை ஏக்கர் காணியின் பெறுமதி ஜம்பதினாயிரம் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டு காணி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு நான்கு பேருக்கும் மதிப்பீடு செய்யப்பட்ட பணத்திதைச் செலுத்தி இரண்டு ஏக்கர் காணியையும் மீள உரிமையாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தினை பொலிஸ் நிலையத்தினூடாக நீதிமன்றத்தின் கவனத்திற்குக்கொண்டு சென்றிருந்தால் பல்வேறு பிரச்சினைகளை அரச உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்படுவதுடன் வேலையும் பறிபோகும் நிலை ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net