பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை ஜனாதிபதி சந்திப்பு!
அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அடுத்த வாரம் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அடுத்த வாரம் 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது அமெரிக்கா, ஆசியான் உச்சி மாநாடு, சிங்கப்பூரில் நடைபெறும் கிழக்கு ஆசிய உச்சிமாநாடு ஆகியவற்றில் கலந்துகொள்கின்றார்.
ட்ரம்பின் கோரிக்கையை ஏற்று துணை ஜனாதிபதி குறித்த மாநாடுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
மேலும், நான்கு நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் போது, பிரதமர் மோடியையும் மைக் பென்ஸ் சந்தித்து பேசவுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, இருநாட்டு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜப்பான், சிங்கப்பூர், அவுஸ்ரேலியா மற்றும் பபுவா நியூ கினியா போன்ற நாடுகளில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 18 ஆம் திகதி வரை சுற்றுப்பயணம் செய்யும் மைக் பென்ஸ், அங்கு ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசியன் லோங், பபுவா நியூ கினியா பிரதமர் பீட்டர் ஒ நெயில், அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.