யுத்த்தினால் இழப்புக்களை சந்தித்தோருக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு!

யுத்த்தினால் இழப்புக்களை சந்தித்தோருக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு!

யுத்த்தினால் இழப்புக்களை சந்தித்தோருக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சயில் இடம்பெற்றது.

கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் குறித்த நிகழ்வு 11.30 மணியளவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா, ராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

30 மில்லியன் பெறுமதியான தொகை 334 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது, யுத்தத்தினால் உயிரிழந்தோர், அங்கவீனர்கள், சொத்துக்களை இழந்தோர் மற்றும் சேதமாகிய வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றிற்கு குறித்த இழப்பீடுகள் இன்று ஒரு கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது,

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் குறிப்பிடுகையில்,
இந்த ஆட்சி தொடர்ந்தும் நீடிக்கும் என்து தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

கடந்த 3 வருடங்களாக வீட்டுத்திட்டங்கள் வழங்குவதில் இழுபறி நிலை காணப்பட்டது. அவ்வாறு இழுபறியுடனனேயே காலங்கள் கட்த்தப்பட்டன.

விஞ்சான அமைச்சு என கூறிக்கொண்டிருந்த நிலையில் ஜனாதிபதி அவர்களால் உரிய முறையில் அமைச்சுக்களை தானாக தீர்மானித்து வழங்க முடிந்திருக்கவில்லை.

இன்று பொருத்தமான வகையில் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் வீட்டுத்திட்டங்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமுர்த்தி பயனாளிகளிற்கு சமுர்த்தி வழங்கப்படவில்லை. அவர்களையும் சமுர்த்தி பயனாளிகளாக தெரிவு செய்து அடுத்த வருட ஆரம்பத்திற்குள் அவர்களிற்கு சமுர்த்தி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

நீர் நிலைகளில் இப்புாது நீர் அதிகரித்து வருிக்னறது. வடக்கில் காணப்படும் குடிநீர் பிரச்சினைக்கு பல்வேறு திட்டங்கள் எம்மிடம் உள்ளது. பொருத்தமான வகையில் நாம் திட்டங்களை எவருக்கும் பாதிப்பு இல்லாது கொண்டு செல்வோம்.

புதிய குடியேற்றங்கள் இல்லாமல் மகாவலி திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எமது வசம் உள்ள வழங்களை ஏனையவர்களிற்கும் பகிர்ந்தளிக்க நாம் முன்வர வேண்டும். இங்கு உள்ளவர்களை பட்டினி போட்டோ, நீர் இல்லாமலோம் நாம் அடுத்த மாவட்டத்திற்கு எந்த வளத்தையும் கொண்டு செல்ல போவதில்லை.

சிலரது சுயநல அரசியலிற்காக மக்கள் அவர்களிற்கு ஒத்திசைக்க கூடாது என தெரிவித்தார்.

வடக்கு மாகாணசபையில் நிதி இல்லை என்றார் நிதி மோசடி குற்றச்சாட்டு எவ்வாறு வந்தது. அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்றால் அதிகார துஸ்பிரயோகம் எவ்வாறு வந்தது.

இவ்வாறு மாகாண சபையை வீணாக கழித்து விட்டனர். மாகாண சபையால் மக்களிற்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை. அண்மையில் சம்பந்தன் அவர்கள் மாகாண சபையால் பலவற்றை சாதித்திருக்கலாம் என்ற கருத்தை குறிப்பிட்டார்.

மாகாண சபை கலைந்த பின்னர் அவர் அவ்வாறு கருத்து கூறியுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

வடக்கு மக்களின் வறுமைநிலையை போக்குவதற்கு பல்வேறு திட்டங்கள் உள்ளதாகவும் அமைச்சர் இதன்புாது குறிப்பிட்டார்.

இங்கு கருத்து தெரிவித்த மஸ்தான் குறிப்பிடுகையில், இப்போதுதான் விங்ஞான அமைச்சு பொருத்தமான பகுதிக்கு கிடைத்துள்ளது.

இங்கு உள்ளவர்களிற்குதான் மீள்குடியேற்றம் உள்ளிட்வற்றிற்கு பொருத்தமான அமைச்சு கிடைத்திருக்க வேண்டும்.

கடந்த காலங்களில் எவ்வித நன்மையும் குறித்த அமைச்சினால் கிடைத்திருக்கவில்லை. இன்று பலர் இந்த அரசு நிற்காது. கவிழ்க்கப்படும் என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால் அது நடக்காது.

இந்த அரசு நீடிக்கும். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கை பலப்படுத்தப்பட்டு அரசு தொடரந்தும் செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net