இலங்கை அரசியல் களம்! இந்தியாவின் நிலைப்பாடு வெளியானது!
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமின்மை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு வெளியாகியுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் சார்பில் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரவீஸ்குமார் இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் இலங்கையில் ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளிக்கப்படும் என்று இந்தியா நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் ரவீஸ்குமார் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசியபோது இலங்கையின் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை தொடர்பில இந்திய அரசாங்கம் அவதானித்து வருவதாக தெரிவித்தார்.
இந்தநிலையில் இலங்கையில் ஜனநாயக பண்புகளுக்கு மதிப்பளிக்கப்படும் என்றும் இந்தியா தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் ரவீஸ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்தக்கருத்தை இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.