நபரொருவரின் சட்டை பையில் போதை பக்கெற்றை போட்டுவிட்டு மிருகத்தனமாக தாக்கிய பொலிஸ் அதிகாரி!

நபரொருவரின் சட்டை பையில் போதை பக்கெற்றை போட்டுவிட்டு மிருகத்தனமாக தாக்கிய பொலிஸ் அதிகாரி!

வென்னப்புவ பொலிஸாரின் மனிதாபிமானமற்ற தாக்குதலைக்கண்டித்து பொலிஸ் ஆணைக்குழுவில் நபரொருவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தன்னுடைய சகோதரன் வென்னப்புவ பொலிஸ் நிலைய சிறையில் இருப்பதாக தனக்கு வந்த பொலிஸாரின் தொலைபேசி அழைப்பிற்கமைய கடந்த 4ம் திகதி அங்கு சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையை சிவில் உடையில் இருந்த உப பொலிஸ் அதிகாரி பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

இது தொடர்பாக பொலிஸ் ஆணைக்குழுவில் பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு இலக்கானவர் வென்னப்புவ , லுணுவில சமனல மாவத்தையில் வசிக்கும் காவலாளியான லியனகே அருண வசந்த (31)என்பவராகும்.

தனது பெற்றோர் பார்த்துக்கொண்டிருக்கும்போது பொலிஸ் நிலையத்தில் வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

லுணுவில அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னனர் குறித்த நபர் மாரவில் அரச மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு வைத்தியசாலைப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அவர் இதுதொடர்பாக குறிப்பிடுகையில்,

தம்பி பொலிஸ் சிறையில் இருப்பதாக கிடைத்த தொலைபேசி அழைப்புக்கமைய நானும் அம்மாவும் அப்பாவும் வென்னப்புவ பொலிஸிற்கு வந்தோம்.

நான் பொலிஸாருக்கு அருகில் இருந்தபோது அங்கு சிவில் உடையில் இருந்த அதிகாரி என்னுடன் பேசினார். அவர் அதிக மதுபோதையில் இருப்பதாக தெரிந்தது.

திடீரென என் சட்டையின் கொலரைப்பிடித்து இழுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு பின்புறத்தில் கொண்டு சென்றார்.

ஏன் என்னை அடிக்கிறீர்கள் என்ன தவறு செய்தேன் என கேட்டேன். பல தடவைகள் முகத்தில் அறைந்தார்.

எனது பையில் குடு பைக்கெட் ஒன்றைப்போட்டார். எனது நிலையைக் கண்ட அம்மா பொலிஸ் நிலையத்தினுள் மயங்கி விழுந்தார்.

அன்றைய தினமே முறைப்பாடு செய்தபோது வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்யுமாறு தெரிவித்தனர்.

பின் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 3 நாட்கள் சாப்பிட முடியாமல் இருந்தேன். கடந்த 7ம் திகதி டிக்கெட் வெட்டி வீட்டுக்கு வந்தேன் என குறிப்பிட்டனார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net