கொழும்பு உயர் நீதிமன்றத்தின் முன்னால் குழப்பம்.
கொழும்பு உயர் நீதிமன்றத்தின் முன்பாக இன்று குழப்பமான சூழல் ஏற்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய இன்றைய தினம் பலர் உயர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
இந்த நிலையில் அங்கு வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஊடகங்களுக்கு இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் அவர் அங்கிருந்து செல்ல முயற்சித்த போது கூட்டத்திலிருந்த அடையாளம் தெரியாத நபரொருவர் கூச்சலிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கோபமடைந்துள்ளார். இந்த நிலையிலேயே அங்கு சிறிது நேரம் குழப்பமான சூழல் நிலவியுள்ளது.