மைத்திரிபாலவை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதாக தகவல் வெளியிட்டுவர் தேர்தலில் போட்டி.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதாக தகவல் வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நாமல் குமார என்பவர் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
இவர் மஹிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிட உள்ளார் என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாமல் குமார ஊழல் ஒழிப்பு அமைப்பின் பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.
உயிர் அச்சுறுத்தல்களை கருத்திற் கொள்ளாது பாரிய சம்பவம் ஒன்று பற்றிய விபரங்களை வெளியிட்டதாகவும், மக்களின் கோரிக்கைக்கு அமைய தாம் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனது திறமை, அர்ப்பணிப்பு என்பனவற்றை கருத்திற்கொண்டு அரசியலில் களமிறக்குமாறு மக்கள் கோருகின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைளை எடுத்து வருவதாக நாமல் குமார குறிப்பிட்டுள்ளார்.