நானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் ! நாங்கள் நிரூபித்துவிட்டோம்.
சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட புதிய அரசாங்கம் மற்றும் பிரதமருக்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் என தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தின் இறைமை இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
நாடு சுமூகநிலைமைக்கு திரும்பவேண்டிய தருணம் இதுவெனவும் குறிப்பிட்டுள்ள அவர் நல்லாட்சி நிலவவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.