இலங்கை வரலாற்றில் கறை படிந்த நாள் இது!
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற பெரும் அசம்பாவிதத்திற்கு மஹிந்த அணியினரே முழுக்காரணம் என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அசம்பாவிதத்தை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அசம்பாவிதத்திற்கு முழுக் காரணம் மஹிந்த அணியினரே. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்பதை தற்போதே காட்டி விட்டார்கள்.
மஹிந்தவுக்கு எதிராக சுமந்திரனால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்றுள்ள இந்த அசம்பாவிதத்திற்கு இவர்கள் தான் பொறுப்பு. இது இலங்கை வரலாற்றிலேயே ஒரு கறை படிந்த நாளாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.