சபாநாயகரின் உயிர் ஆபத்து! கொலை செய்ய சதி?
சமகால சபாநாயகர் கரு ஜயசூரியவை கொலை செய்வதற்கான முயற்சிகள் ஏற்படுவதாக ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்ட மோதல் சம்பவத்தின் போது, சபாநாயகரை கொலை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
சபாநாயகருக்கு பாரிய காயங்கள் ஏற்படும் வகையில் தாக்குதவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
ராஜபக்ஷ தரப்பின் சில உறுப்பினர்களின் அச்சுறுத்தல் இந்த சந்தேகத்தை ஏற்பட்டுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏதாவது ஒரு இடத்தில் சபாநாயகருக்கு பாரிய காயம் ஏற்பட்டால் நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் முழுமையாக செயலிழந்து போய்விடும்.
இதன்போது புதிய சபாநாயகர் ஒருவரை நியமித்து கொள்ளும் முயற்சி ஒன்று ராஜபக்ச தரப்பினரால் நிச்சியமாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் என அவர் குறிப்ப்பிட்டுள்ளார்.
அதற்கமைய மஹிந்தவின் பிரதமர் பதவியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.
இந்த நிலைமையில் சபாநாயகரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் சபாநாயகருக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோருவதில் பயனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக சபாநாயகரின் செயற்பாடுகள் இலங்கையின் அரசியலை தீர்மானிக்கும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சபாநாயகர் பக்கச் சார்ப்பாக நடந்து கொள்வதாக மஹிந்த தரப்பினரால் குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.