மிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்!
கிளிநொச்சி மாவட்டத்தில் 90 வீதிமான உள்ளக வீதிகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதனால் பொது மக்கள நாளாந்தம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி நகர்புற கிராமங்கள் தொடக்கம் மாவட்டத்தின் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் உள்ள உள்ளக வீதிகள் மக்களின் சீரான போக்குவரத்துக்கு ஏற்றவகையில் காணப்படவில்லை.
பல கிராமங்களில் ஒரு வீதியேனும் நிரந்தர வீதியாக புனரமைக்கப்படவில்லை.மிக நீண்ட காலமாக இவ்வாறன வீதிகள் குன்றும் குழியுமாக காணப்பட்டு வருகிறது.
உள்ளுராட்சி சபைகளுக்கு சொந்தமான குறித்த வீதிகள் புனரமைக்கின்ற வளம் கொண்டதாக கிளிநொச்சியின் உள்ளராட்சி சபைகள் காணப்படவில்லை இந்த நிலையில் விசேட திட்டங்கள் மூலமே இவ்வீதிகளை புனரமைக்க வேண்டும் ஆனால் அதற்கான நடவடிக்கைகளையும் உள்ளுராட்சி சபைகள் இதுவரைக்கும் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.