ரணிலை பிரதமராக ஜனாதிபதி அங்கீகரிக்க வேண்டும்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் போலி அரசாங்கத்திற்கும் எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீண்டும் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளமையை அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த விடயம் தொடர்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) ஆங்கில ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே ஆவர் இவ்வாறு கூறினார்.
மேலும் இன்று நடாளுமன்றத்தில் வாய்மூலம் வாக்களிக்கப்பட்டு அதில் தோல்வியடைந்த இந்த புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.